-
தயாரிப்பு ஐடி: NOIL001
செக்கு நல்லெண்ணெய்செக்கு நல்லெண்ணெய்
அதாவது தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். ஆனால் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்து விட்டு, அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ஏன் இப்படி? அதற்கு எள் எண்ணெய் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அனால் வைக்க வில்லை. இந்த எண்ணெயின் எல்லையில்லாத நன்மைகளை பார்த்து விட்டு, நல்லதை செய்யக்கூடிய நல்லெண்ணெய் என்பதை அதன் பெயரிலேயே சுட்டிக்காட்டிவிட்டார்கள்.
இன்றைக்கும் கடைகளில் நல்லெண்ணெய் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் என்பது, பெரிய இயந்திரங்கள் மூலம் எள்ளை அரைத்து பெறப்படும் எண்ணெய். ஆனால் நாங்கள் பல ஆண்டுகளாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறோம். அதாவது எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.
நல்ல எண்ணெய் என்ற பெயரில் இப்பொழுது கடைகளில் கிடைக்கும் எந்த எண்ணையும் உண்மையிலேயே நல்ல எண்ணெய் கிடையாது. நல்ல எண்ணெய் என்பதற்கு எள்ளு எண்ணெய் என்று பொருள். நீங்கள் கருப்பு எள்ளு வாங்கி நீங்களே எண்ணெய் ஆட்டும் செக்கில் கொண்டு போய் கொடுத்து அரைத்து அந்த எண்ணையை சாப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு எது நல்ல எண்ணெய் என்ற வித்தியாசம் தெரியும். நம்மில் பல பேருக்கு ஒரிஜினல் எள்ளு எண்ணெய் எப்படி இருக்கும் என்று தெரியாது. உங்களது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் இதைப் பற்றி விளக்கமாகக் கூறுவார்கள். தயவு செய்து கடையில் விற்கும் எந்த எண்ணையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் குறிப்பாகக் கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெய் என்று பந்தாவாக விளம்பரம் செய்யும் எந்த எண்ணையும் வாங்கி சாப்பிடாதீர்கள். ஏனென்றால் நாம் எண்ணெய் சாப்பிடுவதற்கு அர்த்தமே அதில் கொழுப்பு இருக்கிறது என்பதற்காகத் தான், கொழுப்பு இல்லாத ஒரு எண்ணெய் குப்பையில் கொட்ட வேண்டிய ஒரு குப்பைப் பொருள். நீங்கள் Original எள்ளு எண்ணெய்க்கு எங்கு சென்றாலும் கண்டிப்பாக ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும். எனவே, 20 கிலோ கருப்பு எள்ளு வாங்கி வந்து வெயிலில் காய வைத்துக் கற்களை அகற்றி அதனுடன் 1 கிலோ பனங்கருப்பட்டி சேர்த்து அருகில் உள்ள எண்ணெய் ஆட்டும் கடையில் கொண்டு போய் கொடுத்தால் உங்கள் கண் முன்னாலேயே அரை மணி நேரத்தில் எள் எண்ணெய்யாக மாற்றிக் கொடுப்பார்கள். அதை ஒரு நாள் வெயிலில் காய வைத்தால் அதிலுள்ள கழிவுப் பொருட்கள் கீழே தங்கும். இப்பொழுது சுத்தமான ஒரிஜினல் எண்ணெய் தயார். இப்படி உங்கள் வீட்டிற்குத் தேவையான எள் எண்ணையை நீங்களே தயாரி செய்து வைத்துக் கொண்டால் நம் உடலில் ஆரோக்கியம் என்றுமே இருக்கும். எனவே, நமது வீட்டில் இனிமேல் ஒரிஜினல் எள் என்னையே பயன்படுத்துங்கள் ஒரிஜினல் எள் எண்ணெய் என்று யார் கொடுத்தாலும் வாங்காதீர்கள். நீங்களே செய்தால் மட்டுமே அது உண்மை. நமது முன்னோர்கள் அனைவரும் எள் எண்ணெயைச் சாப்பிட்டதால் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக திடமாக வாழ்ந்தார்கள்.எனவே, நமது சிகிச்சையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருள்களையும் குறிப்பாக தேங்காய் மற்றும் எண்ணெய்ப் பலகாரத்தை சாப்பிடுவதால் மட்டுமே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் நாம் கொழுப்புப் பொருட்களையும் எண்ணெய் தேங்காய் பொருட்களையும் சாப்பிடுவதன் மூலமாக நல்ல கொழுப்பாக (HDL) மாற்றி இரத்தத்தில் கலக்கு பொழுது கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணப்படுத்த முடிகிறது. நல்ல கொழுப்பை அதிகமாக இரத்தத்தில் கலந்தால் கெட்ட கொழுப்பு தானாக வெளியே வருகிறது. நமது சிகிச்சை முறைப்படி ஒன்று அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்ட பிறகு மீண்டும் உங்கள் கொழுப்பு சம்பந்தப்பட்ட டெஸ்டுகளை எடுத்துப் பார்த்து கெட்ட கொழுப்பு குறைந்துள்ளதைக் கண்டுபிடித்து சந்தோசமாக வாழுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !!
-
தயாரிப்பு ஐடி: NOIL002
செக்கு கடலை எண்ணெய்செக்கு கடலை எண்ணெய்
கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.கடலை எண்ணெயில்'வைட்டமின்-இ'மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. வைட்டமின் இ, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். செல் சவ்வுகள் வளர்ச்சி அடையவும்,ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.
-
தயாரிப்பு ஐடி: NOIL003
வேப்ப எண்ணெய்வேப்ப எண்ணெய்
தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய். வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சிறந்த கிருமிநாசினியாகும்.
பலன்கள்
* இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.
* வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
* வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* வேப்ப எண்ணெயை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணெய்யை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம். -
தயாரிப்பு ஐடி: NOIL004
செக்கு தேங்காய் எண்ணெய்செக்கு தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமை யான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காயவிட்டு செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல் லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
-
தயாரிப்பு ஐடி: NOIL005
ஆமணக்கு எண்ணெய்ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கின் மருத்துவ பயன்கள் : ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர். ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும். உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள ஜீரணக் கோளாறுகள் சீராகும். ஹெர்னியாவில் பிரச்சனை குறையும்
-
தயாரிப்பு ஐடி: NOIL001
செக்கு நல்லெண்ணெய் -
தயாரிப்பு ஐடி: NOIL002
செக்கு கடலை எண்ணெய் -
தயாரிப்பு ஐடி: NOIL003
வேப்ப எண்ணெய் -
தயாரிப்பு ஐடி: NOIL004
செக்கு தேங்காய் எண்ணெய் -
தயாரிப்பு ஐடி: NOIL005
ஆமணக்கு எண்ணெய்
