உணவே மருந்து !!! , இயற்கை மூலிகையும் குணமாகும் நோய்களும் !!!
1. கொத்தமல்லி கீரை - மூளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதியையும் குணமாக்கும்.
2. செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை குணமாக்கும்.
3. பச்சை வாழைப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
4. ரஸ்தாளி வாழைப்பழம் - கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும்.
5. பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
6. கற்பூர வாழை - கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.
7. நாவல்பழம் - நீரிழிவை நீக்கும்.
8. நேந்திரம் பழம் - இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.
9. கொய்யா - சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.
10. பப்பாளி - மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.
11. மாம்பழம் - ரத்த அழுத்தம் சீராகும்.
12. ஆப்பிள் - மலச்சிக்கலை போக்கும்.
13. திராட்சை - இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
14. எலுமிச்சை - மலச்சிக்கலை போக்கும்.
15. செர்ரி - கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
16. மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும்.
17. கேழ்வரகு - கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும் .
18. வெந்தயம் - கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி குணமாகும். மற்றும் இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.
19. இஞ்சி - மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.
20. சின்ன வெங்காயம் - பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட மூல வியாதி குணமாகும்.
21. பூண்டு - பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால் இருதய நோய்க்கு நல்லது.
22. வாழைப்பூ - விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும் சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.
23. நெல்லிக்கனி - உடல் அசதியைப் போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
24. மிளகு - பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால் உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.
25. முள்ளங்கி - கபம், இருமல் ஆகியவை தீரும்.
இயற்கை மூலிகையும் குணமாகும் நோய்களும் !!!
மருந்தின் பெயர் தீரும் நோய்கள்
1. அருகம்புல் - வாத, பித்த கபத்திற்க்கு ஏற்றது.
2. தூதுவளை - நாள்பட்ட இளைப்பு இருமல்
3. கடுக்காய் - மலச்சிக்கல், வாய்வு.
4. நெல்லிக்கனி - வைட்டமின் ”சி” சத்து.
5. வல்லாரை - ஞாபகசக்தி, நரம்பு ஊக்கம்.
6. வில்வம் - பித்தம், வாந்தி, மயக்கம்.
7. முடக்கத்தான் - மூட்டுவலி, தசைவலி.
8. வாழைத்தண்டு - சிறுநீரகக் கோளாறு
9. வாதநாராயணன் - வாத வலிகளுக்கு.
10. பொன்னாங்கண்னி - கண்பார்வைக்கு.
11. மஞ்சள் கரிசாலை - உடல்நலம்.
12. கீழாநெல்லி - இரத்தசோகை, மஞ்சள்காமாலை.
13. நெருஞ்சி - எல்லாவிதமான மூத்திரவியாதி.
14. அத்திக்கீரை - அல்சர்,குடற்புண்.
15. அகத்திக்கீரை - இரத்த அழுத்தத்துக்கு.
16. ஓரிதழ் தாமரை - இரத்த விருத்தி.
17. ஆடாதோடை - காசம், இளைப்பு, கபம்.
18. நாவல் - மதுமேகம்.
19. முருங்கை - பித்தமயக்கம்.
20. முசுமுசுக்கை - கபம், சளி.
21. குப்பைமேனி - சர்ம வியாதிகள்.
22. மணத்தக்காளி - வயிற்றுப்புண்.
23. கரிவேப்பிலை - முடி நரைக்காது, உதிராது.
24. அதிமதுரம் - நாள்பட்ட இருமல்.
25. துளசி - தொண்டை, நுரையீரல் சளி.
26. வெந்தயம் - உடல்நலம்.
27. துத்திக்கீரை - மூலம், பவுத்திரம்.
28. சிறுகுறிஞ்சான் - சர்க்கரை வியாதிக்கு ஏற்றது.
29. வேப்பிலை - வயிற்றுக் கிருமிக்கும், ரத்தசுத்திக்கும்.
30. பிரண்டை - ஜீரண சக்தியை அளிக்கும்.
31. அம்மாம் பச்சரிசி - வெட்டையை குறைத்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.
32. மருதம்பட்டை - இதயபலம்.
33. பூலாப்பூ.- புற்றுநோய்.
34. அரச இலை - கர்ப்பப்பைக்கு ஏற்றது.
35. மகாவில்வம் - சகல ரோக நிவாரணி.
36. சிரியாநங்கை - எல்லா விஷங்களுக்கும்.
