மரவள்ளிக் கிழங்கு: மண்ணுக்குள் வைரம்
குறைந்த தண்ணீர் தேவையைக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. மற்றொருபுறம் மரவள்ளிக் கிழங்கு மாவில் கலப்படத்தைத் தவிர்ப்பதும் அவசியமாகிறது.
நீர்வளத்துக்கு அண்டை மாநில ஆறுகளையே பெரிதும் நம்பியிருக்கிறோம். நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் பயிர் முறையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்லதொரு வாய்ப்பு. ஒரு ஏக்கர் கரும்புப் பயிருக்குத் தேவையான நீரைக்கொண்டு நான்கு ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். மேலும், இது சொட்டு நீருக்கு உகந்த பயிர்.
இது ஓராண்டுப் பயிர். தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப்பொருளாகவும் உணவாகவும் மரவள்ளி பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கி மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவைத் தரும் பயிராக உள்ளது.
புளி - மருத்துவ குணங்கள்
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளியில் கால்சியம், வைட்டமின் "பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.
புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று. குழம்பு, ரசம், சாம்பார், புளிக் குழம்பு, புளியோதரை, சட்னி வகைகள். புளியால் ஆன "பச்சி புளுஸ்'' பிரசித்தம். போன்றவகைகளை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
மருத்துவ குணங்கள்
புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் "டீ'யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது. ஆயுர் வேதத்தில் வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு புளி பயன்படுகிறது புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். புளிய மரப்பட்டையும் மருத்துவ குணம் கொண்ட "டானிக்'.
