எடையை குறைக்கும் தேன்! இதை கவனத்தில் வச்சுக்கங்க!
எளிதில் கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் தேன். சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட, சுவாசக்கோளாறு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள்,தாகம், தீப்புண், விக்கல் போன்றவையும் குணமாக்குகிறது. தேனில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
உடனடி உணவுகள்
தேன் டயட்டினை பின்பற்றுபவர்கள், பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முதற்கட்டமாக ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கொழுப்புகளை கரைக்க முடியும்.
இயற்கை பழங்களில்
கிடைக்கும் உயரிய சத்துக்கள்
நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன. பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து உடலை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி பழங்களில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் உள்ளன. இந்த பழங்களை உண்பதன் மூலம் பார்வைக்கோளறு, மாலைக்கண்நோய் குணமாகிறது.
பப்பாளிப்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. கொய்யா மற்றும் எலுமிச்சையில் பி, சி உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இந்த கனிகளில் உள்ளன கொய்யாப்பழம் மலச்சிக்களை போக்கி மூல நோயை குணமாக்குகிறது. எலுமிச்சை அஜீரணத்தால் ஏற்படும் வாந்தி தாகத்தை போக்குகிறது.
