• OPENING HOURS :
      ALL DAY @ 8AM TO 2:30PM
    • WHATSAPP :
      7010042189
    • HAVE A CALL :
      +91-9941014889
    • REACH US BY :

அரிசி வகைகளும் அதன் குணங்களும்


  • மானாவாரி நெல்!

    தமிழகத்தைப் போன்று அந்தமானிலும் உணவுப் பயிர்களில் நெல் முக்கியமானது, பல்வேறு வகையான நெல் ரகங்கள் பயன்பாட்டில் இருந்தபோதும், ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட சி-14-8 (C-14-8) என்ற புராதன ரகமே பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இது ஒரு பரந்த மரபியல் தன்மை (Broad genetic base) கொண்ட ரகம். அதாவது பயிரின் உயரம், நெற்கதிர்களின் நீளம், அரிசியின் வண்ணம் இதில் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால் பூச்சி, நோய்களால் முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை.

    இந்த வகை நெற்பயிர் 1-1.5 மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய ஒளிச்சார்பு (photosensitive) ரகமாகும். இது பெரும்பாலும் தாழ்ந்த கடற்கரைச் சமவெளியிலும், தண்ணீர் அதிகம் தேங்கும் இடங்களிலும் குறைந்த அளவு இடுபொருளை (ஐந்து முதல் 10 டன் மக்கிய தொழுவுரம்) கொண்டு பயிரிடப்படுகிறது. இது ஜூன் ஜூலை மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் ஒரு நீண்டகால ரகம்.

    இதற்கு அதிகப்படியான டில்லரிங் தன்மையும், வெட்டவெட்டத் துளிரும் இயல்பும் இருப்பதால் இதன் தழைகள் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது - தீவனத்துக்காக மழைக்காலத்திலும் தீவனத் தட்டுப்பாடு உள்ளபோதும் - அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் அவ்வாறு செய்வதால் அதிக மழை, புயலால் பயிர்கள் சாய்ந்துவிடுவது தவிர்க்கப்படுகிறது. இந்த ரகம் மானாவாரியாக ரசாயன உரங்கள் இன்றி அங்கக வேளாண்மை முறையில் பயிரிட ஏற்றது.

  • மூங்கில் அரிசி

    மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.

    மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.

    நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

  • தினை

    உடலிற்கு வலிவு தரும். சிறுநீரை அதிகம் வெளியேற்றி தசைகளை இறுகச் செய்யும். கொழுப்பு - ஊளைச்சதை சேரவிடாது. நல்ல பசியை உண்டாக்கும். விந்தணுக்களை வளரச்செய்யும். வீக்கம், நாட்பட்ட காய்ச்சல், கபம், வாதநோய் இவற்றில் ஏற்ற உணவு.

    இதனை சாதமாக்கிச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிச் சாப்பிட வீக்கம், நீர்த்தேக்கம் வடியும். கூழை பிரசவித்த மாதர் சாப்பிடுவது வழக்கம். இதனை லேசாக வறுத்து மாவாக்கி தேனுடன் சாப்பிட களைப்பு நீங்கும்.

    சாமை

    எளிய உணவுப்பொருள். இனிப்பும், குளிர்ச்சியும் தரும். எளிதில் செரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். உள்ளெரிச்சல் காய்ச்சல் நிற்கும். உடல்வளர்ச்சிக்கும், தாதுவிருத்திக்கும், புஷ்டிக்கும் ஏற்றது. இதன் கஞ்சி பேதியை நிறுத்தும்.

    புழுங்கல் அரிசி

    புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பா கக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரு வது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங் கல் அரிசிதான்.

    திப்பிலி அரிசி

    திப்பிலி அரிசி விந்தினை வளர்க்கும், மேக நோயைக்குணமாக்கும், வாதக் கோளாறுகளைப்போக்கும்.

  • குன்றுமணிச் சம்பா அரிசி

    அரிசியில் சிறுவாத நோய்களைக் குணமாக்கும், பசியை அதிகரிக்கும்.

    செஞ்சம்பா அரிசி

    செஞ்சம்பா அரிசியில் சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.

    கோடைச் சம்பா அரிசி

    கோடைச் சம்பா அரிசி வாதப்பித்த சிலே ட்டும நோய்களைக் குணப் படுத்தும். உட லிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும்.

    ஈர்க்கு சம்பா

    சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிக வும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறு களை உண்டாக்கக் கூடும்.

    பச்சரிசி

    பச்சரிசியைச் சாப்பிட்டால் வாதக் குறை பாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக் கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.

    குதிரைவாலி

    குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.